ஸ்ரீ சாயி அருள்பாலிக்கும் இடம்:
ஓம் சாயி ராம் !
ஸ்ரீ சாயி ராம் !
ஜெய ஜெய சாயி ராம் !
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கம்!

என் இளம் வயது முதல் மருத்துவம் என்று இருந்து வந்தேன், அப்பொழுது என் வாழ்க்கையில் நாத்தீக உணர்வில் இருந்து வந்த நான் இன்று ஆஸ்தீக வழியில் அயராது பயணிக்கின்றேன் என்றால் அது அவன் அருளால் அவன் தாள் வணங்குதல் என்பார்கள். அதேபோல் இறைவன் என் மனதில் புகுந்து ஆட்கொண்டார் என்றால் அது மிகையாகாது, 1977ம் ஆண்டு வரை நெற்றிப் பொட்டும், ஆலய தரிசனமும் அவமானத்திற்குரியது என்று சொல்லி வந்த நான் ஒரு நாள் நோய்வாய் பட்டபோது கசடற கரைத்து குடித்திருந்த மருத்துவ கல்வி எல்லாம் உதவவில்லை. அன்று என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய அதிசயம் அகத்திய மாமுனிவர் கனவில் தோன்றி தன்னை உருவாக்கி வழிபட வேண்டுமென ஆணையிட்டதன் பேரில் அகத்தியரை என் இல்லத்தில் இருத்தி வழிபட்டு வருகிறேன், மேலும் அகத்தியர் அருளால் சீரடி சாயியின் தெய்வீக அருள் தானே வந்து என்னை ஆட்கொண்டது, அன்று முதல் சாய் சேவையை என் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மருத்துவ சேவை செய்தும், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியும் சாயி அருளை அனைவரும் பெறும் வண்ணம் செய்து கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீ சாயியின் ஆணையை ஏற்று தொலைகாட்சிக்கு சென்று நாட்டு மருத்துவத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் புரிய வைத்தேன்.

ஸ்ரீ சாயி பாபாவின் ஆணைப்படி வேலூர் அப்துல்லாபுரத்தில் அவர் அமர்ந்து அருளாசி புரியவென அழகான ஒரு ஆலயம் உருவாக்கி கடந்த 2014 ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கலவை சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் பாலமுருகனடி சுவாமிகள் மற்றும் வேலூரில் உள்ள மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாயி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தின் சார்பில் ஸ்ரீ சேஷசாயி அறக்கட்டளை தொடங்கப்பட்டு அதை தொடர்ந்து கல்வி, ஆரோக்கியம், அன்னதானம் என பல்வேறு சழூக நலப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பணி சிறப்பாக வளர…… நீங்கள் தரும் சிறு உதவி இங்கு பல்வேறு பணிகளுக்கு உதவும். மேலும் இது வளர்வதற்கு இதற்கென உலகம் முழுவதும்…………. சிறு துளி பெருவெள்ளம் என்பது வழக்கம். அதுபோல் நீங்கள் தரும் சிறு உதவி கங்கையெனப் பெறுகி மங்கள வாழ்வை எண்ணி
ஏங்கும் மக்களுக்குத் தர உதவும். “பாபா எனக்கு ஒன்று தந்தால் நான் பத்தாகத் திருப்பித் தருவேன்” என்று “சாயி சத் சரிதத்தில்” உரைத்துள்ள வாக்கு வீணாகாது.

ஓம் சாயி ராம் !
ஸ்ரீ சாயி ராம் !
ஜெய ஜெய சாயி ராம் !


ஸ்ரீ சாயியின் அருளை அணைவரும் பெற வேண்டும்
சித்த மருத்துவர் டாக்டர் சக்தி சுப்பிரமணி
B.A., M.S., M.A., M.Phil., D.H.T.D.A., D.Acu.,

ஸ்ரீ சாயி அருள்பாலிக்கும் இடம்:
ஸ்ரீ சேஷசாயி ஞான ஆரோக்கிய பீடம்
ஸ்ரீ சேஷசாயி நகர்
அப்துல்லாபுரம், வேலூர் - 632 010

For Doner's Referenece :
SRI SESHA SAI CHARITABLE TRUST
(SSSC Trust) (Reg. No. 74/15)
Sai Nagar, Abdullapuram, Vellore - 632 010.
A/c. No. : 8446201000174
Bank : Canara Bank
Branch : Sathuvachari Branch
IFSC Code : CNRB0008446
MICR Code : 632015004

சாயி பக்தர்கள் மேலும் தகவல் பெறுவதற்கு
Contact : +919042411002, +919042215986
e.mail: [email protected]

Photos

Plants: image 2 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 4 0f 4 thumb Plants: image 4 0f 4 thumb Plants: image 1 0f 4 thumb

Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 1 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb

Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 1 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb

Plants: image 3 0f 4 thumb Plants: image 1 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb

Plants: image 1 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb Plants: image 3 0f 4 thumb

வீடியோ